Subscribe Us

header ads

ஐ.ம.சு. கூட்டமைப்பிலிருந்து ஸ்ரீ.ல.சு.கட்சி வெளியேறியது ?


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கூட்டமைப்பிலுள்ள சிறு கட்சிகள் சுதந்திரக் கட்சியை பின்தள்ளிவிட்டு, தத்தமது இருப்புக்களுக்காக கடந்த காலங்களில் செயற்பட்டதன் காரணமாக, சுதந்திரக் கட்சி பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்ததாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியின் அவதானத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
அதேவேளை இன்னும் ஒரு சில தினங்களுக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.பி. ஏகநாயக தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் சுதந்திரக் கட்சி கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இருக்கும் வரை கூட்டமைப்பை கலைக்க முடியாது என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments