மஹிந்த ராஜபக்ச இல்லை என்றால் இந்நேரம் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரபெரும தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னரான காலப் பகுதியில் இருந்தே ஐக்கிய தேசிய கட்சியினால் திட்டமிட்டிருந்த தேசிய அரசாங்கம் மஹிந்த மாத்திரம் இல்லை என்றார் இந் நேரம் உருவாக்கப்பட்டிருக்கும்.
மஹிந்த ராஜபக்ச இன்னமும் தேசிய அரசாங்க கருத்திற்கு தடையாக உள்ளார். அவர் ஜனாதிபதியாக செயற்பட்டு தோல்வியுற்றதன் பின்னர் விட்டோடு இருந்திருக்க வேண்டும்.
அமைதியான நாட்டினை மீண்டும் வீணடிப்பதற்கு அத்தரப்பினர் முயற்சிக்கின்றனர். மஹிந்த ராஜபக்ச என்ற ஒருவர் இல்லை என்றால் நாங்கள் தேசிய அரசாங்கத்தை உருவாக்கியிருந்திருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments