சமூக வலைத்தளங்களில் ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு அதிகமாக பொய் சொல்கிறார்கள் என்று சிட்னி விளம்பர நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது நெட்டிசன்ஸை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
வொர்க்ஸ் சிட்னி விளம்பர நிறுவனம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது யார் என்பதை குறித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய பயனர்களின் ஃபேஸ்புக் பகிர்வுகள், டிவீட்ஸ், இன்ஸ்டாகிராம் கமெண்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுக்காக ஒரு வழிமுறை (algorithm) உருவாக்கப்பட்டு, பொய் தன்மையுடைய பதிவுகளை குறிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது.
ஆய்வில், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆண்களை விட பெண்கள், இருமடங்கு பொய் தன்மை வாய்ந்த பதிவுகளை போஸ்ட் செய்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் ஆண்கள், பெண்கள் அதிகமாக கூறும் பத்து பொய்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் :
1. சிட்னி நகர் மக்களை மையமாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சமூக வலைத்தளத்தில் பெண்கள் ஆண்களை விட இரு மடங்கு அதிக பொய் பேசுகிறார்கள்.
2. ஆண்கள் மற்றும் பெண்கள் சமூக ஊடகத்தில் கூறும் முதல் பத்து பொய் பட்டியலிடப்பட்டுள்ளது.
3. ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகமாக கூறும் ஒரு பொய் : “எந்த பிரச்சனையும் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன்” (‘Nothing’s wrong, I’m fine’).
4.பெண்களில் 64 சதவீதத்தினர் (64%) ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வழக்கமாக பொய் சொல்கின்றனர்.
5.ஆண்கள் தங்களை ஸ்மார்டாக காட்டிக் கொள்ள பொய் சொல்கின்றனர். பெண்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்த பொய் சொல்கின்றனர்.
6. அடிலைட் (Adelaide) நகர ஆண்கள் மற்றும் மான்செஸ்டர் (Manchester) பெண்கள் தான் உலகளவில் சமூக வலைத்தளத்தில் அதிக பொய் சொல்பவர்கள்.
சமூக வலைத்தளத்தில் எந்த பாலினத்தினர் அதிக பொய் சொல்கிறார்கள் என்ற இந்த ஆய்வை முடிக்க சிட்னி விளம்பர நிறுவனம் ஐந்து வருடங்களானது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments