Subscribe Us

மியன்மாருக்கு இலங்கை அனுதாபம் தெரிவிப்பு


மியன்மாரில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை அனுதாபம் தெரிவித்துள்ளது.
மியன்மாருடனான ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவை வலியுறித்தி, இலங்கை வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது மியன்மாரில் ஏற்பட்டுள்ள துயர நிலையை சுட்டிக்காட்டி அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
மியன்மார் சமூக நல, நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் தகவல் படி கடந்த வாரம் பெய்த கடும் மலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி மியன்மார் அரசு சர்வதேச உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments