Subscribe Us

header ads

ஜனாதிபதியுடன் முரண்படாத ஒருவரே பிரதமராக பதவி வகிக்க முடியும்!- ரணில்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முரண்படாத ஒருவரே பிரதமராக பதவி வகிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் அரசாங்க பலத்தைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாட்டை செய்ய கூடியவர், ஜனாதிபதியுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்பவராக இருக்க முடியாது.

என்னுடன் இணைந்து செயற்பட சர்வதேச சமூகம் இணங்கியுள்ளது.

நாட்டை அபிவிருத்தி செய்யத் தேவையான வெளிநாட்டு கடன் உதவி, வெளிநாட்டு முதலீடு மற்றும் வர்த்தக வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்து மக்களும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments