Subscribe Us

நலன்புரி நிலையங்களிலுள்ள வாக்காளர்களுக்கு விசேட பஸ்சேவை : யாழ். மாவட்ட அரச அதிபர்

இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க செல்வதற்காக விசேட பஸ் சேவை எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி  அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தொவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர்  மேலும் தெரிவிக்கையில்,
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள்  வாக்களிப்பதற்கு செல்வதற்கு வசதியாக அவர்கள் தங்கியுள்ள பிரதேசங்களில இருந்து வாக்களிப்பு நிலையங்களுககு செல்வதற்க்கு விசேட  பஸ்சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, கரவெட்டி, கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய்  ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மககள் வாக்களிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தந்து பஸ்களில் சென்று வாக்களிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments