Subscribe Us

நாடாளுமன்றத்தில் அமரப் போகும் தந்தை மற்றும் புதல்வர்கள்


குடும்ப அரசியல் என்பது ஆசியாவில் குறிப்பாக தெற்காசியாவில் மிகவும் பிரபலமான விடயமாகும்.
இலங்கையில் அரசியலில் சேனாநாயக்க, பண்டாரநாயக்க போன்ற அரசியல் குடும்பங்களை போல் பல அரசியல் குடும்பங்களின் உறுப்பினர்கள் நாட்டின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளனர்.

ஆசியா நாடுகளின் அரசியல் ஒரு அங்கமாக குடும்ப அரசியல் இருந்து வருகிறது. இதனால், இலங்கை அரசியலிலும் அது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தந்தை மாரும் இரண்டு புதல்வர்களும் நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட அவரது புதல்வர் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அதேபோல், ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அவரது புதல்வர் சத்துர சேனாரத்ன ஆகியோரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

எனினும் கண்டியில் போட்டியிட்ட எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் நுவரெலியாவில் போட்டியிட்ட அவரது புதல்வர் நாரத திஸாநாயக்க ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

Post a Comment

0 Comments