ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக தங்கள் வாக்குகளை பயன்படுத்திய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகச் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அழுத்தங்களுக்கு மத்தியிலும் தன்னுடன் செயற்பட்ட அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வதாக அவர் கூறியுள்ளார்.
தான் தேர்தலில் போட்டியிட்ட குருணாகல் மாவட்டத்தின் அனைத்து வேட்பாளர்களுக்கும், வாக்குகளை வழங்கிய அனைவருக்கும், விசேடமாக ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments