-M.H.A Jabbar-
தேர்தல் ஒன்றின் மூலம் நாம் அளித்திடும் வாக்குகள்
மூலமே முழு சமூகத்தின் மீதான அதிகாரத்தையும் ஒருவரிடமோ, பலரிடமோ ஒப்படைக்கப் படுகிறது. நாம் வழங்கும்
வாக்குகள் ஊடாகவே எமது பிரதிநிதிகளை மாத்திரமன்றி முழு நாட்டின் மீதும், எமது எதிர்
கால சந்ததிகளின் மீதும், முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும்
அரசியல் தலைமைகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும்
நாம் தெரிவு செய்கின்றோம். அகவே நாம் பெற்றிருக்கும் வாக்குரிமை என்பது நாம்
சுமந்திருக்கும் பெரியதோர் அமானிதமாக இருக்கிறது.
வேட்பாளர்கள் நாளை அதிகாரிகளாக வந்து அரங்கேற்றும்
அட்டூழியங்கள், அடாவடித் தனங்கள், அத்துமீறல்கள், அநியாயங்கள், பொய்கள், களவுகள்
அனைத்திற்கும் நாமும் பொறுப்புக் கூற வேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் ஊழல்,
மோசடிகள் அனைத்திலும் நமக்கும்
பங்குள்ளது என்பதை புரிந்து கொண்டே ஒருவரை ஆதரிக்கவோ, வெறுக்கவோ வேண்டும். பிரதேச வாதத்திற்காகவோ,
கட்சி வாதத்திற்காகவோ நாம் தெரிந்துக் கொண்டே தகுதியற்ற ஒருவரை ஆதரிக்கும் பொழுது அவர்களின்
நாசகார செயல்கள் குறித்தும், அவர்கள் சமூகத்துக்கு
இழைக்கும் அநீதிகள் குறித்தும் நாளை மறுமையில் இறைவன் முன்னிலையில் விசாரிக்கப் படுவோம்
என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே, நமது வாக்குகள் மூலமே நம்மீதும்,
முஸ்லிம் சமூகத்தின் மீதும் அதிகாரம் செலுத்த நாமே ஒருவரைத் தெரிவு செய்யப் போகிறோம்
என்பதை உணர்ந்து கொண்டு, மிகவும்
சாணக்கியத்துடனும், மூலோபாய திட்டமிடல்களுடனும், இராஜதந்திர ரீதியாகவும் நாம் நடந்து கொள்வதோடு, அதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்
யார்? யார்? என்பதை அலசி ஆராய்ந்து, அனுபவம், மற்றும் அறிவுள்ளவர்கள் பலருடன் கலந்தாலோசனை (மஷூரா)
செய்து கொண்டு, தேசிய மற்றும்
சமூக உணர்வுடன் நலவை நாடி இறைவனிடம் பிரார்த்தனை (இஸ்திகாரா) செய்துவிட்டு நமது வாக்குரிமைகளைப்
பயன் படுத்த முன் வருவது அவசியமாகும்.
இறைவன் தனது திருமறையில் இறைத்தூதர் (ஸல்லாஹு அலைஹி
வ ஸல்லம்) அவர்களைப் பார்த்து பின்வருமாறு கட்டளையிடுகிறான்.
قال الله تعالى :
وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ
اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِين (سورة آل عمران 159)
தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால்
அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப் பேற்படுத்துவோரை
நேசிக்கின்றான். (அல் குர்ஆன் 3:159)
இறைவனின் போதனைக்கு அமைவாக இறைத்தூதர் (ஸல்லாஹு
அலைஹி வ ஸல்லம்) அவர்கள் எல்லா காரியங்களிலும் ஆலோசனை செய்யும் வழக்க முள்ளவர்களாக
காணப் பட்டார்கள். தனக்கு நேரடியாக வஹி இறங்கிய போதும் தமது காரியங்களில் மஷூரா செய்யும்
வழி முறையை தனது சமூகத்தாருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே இவ்வாறு நடைமுறைப் படுத்திக்
காட்டி யுள்ளார்கள்.
இறைவன் தனது நல்லாடியார்களின் பண்புகள் பற்றி குறிப்பிடும்
போது பின்வருமாறு கூறுகிறான்:
قال الله تعالى : وَالَّذِينَ
اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ (سورة الشورى 38)
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை
(ஒழுங்குப்படி) நிலை நிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்த வற்றிலிருந்து (தானமாகச்)
செலவு செய்வார்கள். (அல் குர்ஆன் 42:38)
பொதுவான காரியங்களில் இவ்வாறு கலந்தாலோசனை செய்வது
அவசிய மென்றால் நமது முழுப் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும், முழு நாட்டின்
மீதும், எமது எதிர் கால சந்ததிகளின் மீதும், முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும்
ஆதிக்கம் செலுத்தும் அரசியல் தலைமைகளையும், சட்டமன்ற
உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் நியமிக்க மேட் கொள்ளப்படும் இந்த விவகாரம் எவ்வளவு
பாரதூரமானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனிதன் எவ்வளவுதான் தனது திறமையை பயன் படுத்தி முடிவுகளை
எடுத்தாலும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும்?, எவ்வாறு நிலைமைகள் மாறும்? எது அவனுக்கு சாதகமாக அமையும்? எது அவனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடியாது.
அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்:
قال الله تعالى : وَعَسَىٰ
أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ
لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ (سورة البقرة 216)
“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்;
அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்;
நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்;
அது உங்களுக்கு தீங்காகவும்
இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள்
அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல் குர்ஆன் 2:216) எனவேதான் இறைவன் பின்வருமாறு நமக்குக் கட்டளையிடுகிறான்:
قال
الله تعالى : فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ
الْمُتَوَكِّلِين (سورة آل عمران 159)
“பின்னர் (அவை பற்றி)
நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற் படுத்துவீராக! நிச்சயமாக
அல்லாஹ் தன் மீது பொறுப் பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்”. (3:159)
இதன் காரணமாகவே இறைத் தூதர் (ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம்)
அவர்கள் “இஸ்திகாரா”
எனும் நலவை நாடி இறைவனிடம்
பிரார்த்தனை செய்யும் வழிமுறையை பின்வருமாறு கற்றுத் தந்துள்ளார்கள்.
(( عَنْ جَابِرِ بْنِ
عَبْد ِاللَّهِ رَضِي اللَّهم عَنْهمَا قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا
كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ
بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ
وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ
وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ
تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ
أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي
ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي
فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي
وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ
حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ وَيُسَمِّي حَاجَتَهُ )) (صحيح البخاري)
ஜாபிர் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் எங்களுக்கு
எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை)
குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
(அதன் முறையாவது): நீங்கள் ஒரு காரியத்தைச் செய்ய
நினைத்தால் கடமையான தொழுகை அல்லாத (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள்.
பிறகு அல்லாஹ்விடம், பின்வருமாறு பிரார்த்திக்கவும்:
اللَّهُمَّ إنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ , وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ
, وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِرُ , وَتَعْلَمُ
وَلا أَعْلَمُ , وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ , اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ
هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك ) خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي
أَوْ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ , فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ
لِي فِيهِ , اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك
) شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ
, فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ
ارْضِنِي بِهِ .
‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக மின் ஃபழ்லிகல் அழீம். ஃபஇன்னக தக்திரு
வலா அக்திரு. வதஃலமு வலா அஃலமு வஅன்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த தஃலமு
அன்ன ஹாதல் அம்ர் (தேவையைக் குறிப்பிட வேண்டும்) கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆகிபதி அம்ரீ, ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹி,
ஃபக்துர்ஹு லீ. வயஸ்ஸிர்ஹு
லீ சும்ம பாரிக்லீ பீஹி. வ இன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர (தேவையைக் குறிப்பிட வேண்டும்)
ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆகிபதி அம்ரீ, ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹி, ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்” என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’
என்று கூறினார்கள்.
(பொருள்: இறைவா! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு
நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக்
கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னுடைய மாபெரும்
அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்;
எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது.
நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும்
கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் (தேவையைக் குறிப்பிட
வேண்டும்) எனக்கு ‘என் மார்க்கத்திலும்
என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’
நன்மை யானதாக இருக்குமென நீ
அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற் குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம்
(தேவையைக் குறிப்பிட வேண்டும்) எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை
என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக் காரியத்தை விட்டுத் திருப்பி விடுவாயாக.
நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற் குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத்
திருப்தியை அளித்திடுவாயாக.)
அல்லாஹ்வே அகிலத்தின் அதிபதியாக இருக்கின்றான்.
அவன் நாடியவர்களுக்கு ஆட்சி பொறுப்பை வழங்குகின்றான். நாடியவர்களிடம் இருந்து அதனை
பிடுங்கி எடுக்கின்றான் என்பதை பின்வரும் அல் குர்ஆன் வசனங்கள் தெளிவு
படுத்துகின்றன.
قُلِ
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ
مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ
الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ
شَيْءٍ قَدِيرٌ، تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي
اللَّيْلِ ۖ وَتُخْرِجُ الْحَيَّ
مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ۖ وَتَرْزُقُ مَن تَشَاءُ
بِغَيْرِ حِسَابٍ (سورة آل عمران 26/27)
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக் கெல்லாம் அதிபதியே! நீ
யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;
இன்னும் ஆட்சியை நீ விரும்பு வோரிடமிருந்து
அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;
நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;
நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப்
பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;
நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;
மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே
வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும்
வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக்
கொடுக்கின்றாய். (அல் குர்ஆன் 26/27)
முழுமையாக இறைவன் மீது நம்பிக்கை (ஈமான்)
கொண்டு, அவன் கட்டளை பிரகாரம் நற்காரியங்கள் செய்து வருவதே நாலாட்சியை பெற்றுக்
கொள்வதற்கான வழி முறை என்பதை பின் வரும் அல் குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகிறது.
قال
الله تعالى: وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا
الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ
مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ
وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي
لَا يُشْرِكُونَ بِي شَيْئًا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ
فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ (سورة النور 55)
உங்களில் எவர்
ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை,
அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு)
ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி
வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட
மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும்,
அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக்
கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்;
“அவர்கள் என்னோடு (எதையும்,
எவரையும்) இணைவைக்காது,
அவர்கள் என்னையே வணங்குவார்கள்;”
இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து
நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அல் குர்ஆன் 24:55)
இவ்வாறு இஸ்லாம் நமக்குப் போதிக்கும் வழிமுறையை
பின்பற்றி தகுதிவாய்ந்த, சமூகத்துக்கு பலனுள்ள
அதிகாரிகளைத் தெரிவு செய்ய எத்தனிப்போமாக, எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் பாலிப்பானாக. ஆமீன்
"اللهم لاتسلط
علينا بذنوبنا من لايخافك فينا ولا يرحمنا"
இறைவா! எமது பாவத்தின் காரணமாக எமது விடயத்தில்
உன்னை பயப்படாத மற்றும் எம்மீது கருணை காட்டாத அதிகாரிகளை எம்மீது நியமித்து
விடாதே...


0 Comments