Subscribe Us

சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் தள வைத்தியசாலைக்கு விஜயம்

அபு அலா –


சுதேச வைத்திய திணைக்களத்தின் ாகாண ஆணையாளர் ஆர்.ஸ்ரீதரன் உள்ளிட்ட குழுவினர் 
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு 
வைத்தியசாலை நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் விடுத்த வேண்டுகோளுக்கினங்வே இந்த குழுவினர் கடந்த (30) விஜயம் செய்தனர்.

மேற்படி விஜயத்தை மேற்கொண்ட குழுவினரை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .எல்.எம்.நக்பர் வைத்தியசாலை மருந்தக களஞ்சியம், தொற்றா நோய் பிரிவு, ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி, வைத்தியர்களின் அறை வைத்தியசாலையின் சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றை பார்வையிட வைத்து அங்கு நிலவும் குறைபாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

இக்குறைபாடுகளை கேட்டறிந்த சுதே வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் 
ஆர்.ஸ்ரீதரன், கணக்காளர் கே.லிங்கேஸ்வரன் ஆகியோர் இக்குறைபாடுகளை மிக விரைவில் செய்துதருவதாக வாக்குறுதியளித்தனர்.






Post a Comment

0 Comments