எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் எடுத்துள்ள விருப்பு வாக்குகள் 500566 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது இடத்துக்குத் தெரிவாகிய வேட்பாளரை விடவும் மூன்று லட்சத்து 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் ரணில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments