தேவையான பொருட்கள் :
சுண்டைக்காய் - 200 கிராம்
சிறிய வெங்காயம் - 100 கிராம்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
• சுண்டைக்காயின் காம்பை நீக்கி விட்டு சற்று நசுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
• வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
• சுண்டைக்காயில் சிறிது நீர் விட்டிருக்கும். அந்த நீரை வடித்து விட்டு சுண்டைக்காயை மட்டும் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.
• பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
• சூடாக பரிமாறவும்.


0 Comments