கல்கி தமிழ்நாட்டின் ஒரு பிரபலமான எழுத்தாளர்.அவர் பொன்னியின் செல்வன் என்று ஒரு புகழ்பெற்ற நாவல் ஒன்றை எழுதினார்.அந்த நாவலில் ஒரு சுவாரஸ்யமான பாத்திரம் ஒன்று வரும். அப்பாத்திரத்தின் பெயர் ஆழ்வார்க்கடியான் நம்பி.குடுமி வைத்திருப்பான்.நெற்றி முழுவதும் பட்டை பூசியிருப்பான். பயங்கரமான திருமால் பக்தனாக தன்னைக் காட்டிகொள்வான். மக்களோடு மக்களாக இருப்பான்.ஊர் ஊராக சுற்றித் திரிவான்.மக்களும் அவனை ஒரு மார்க்கவாதியாகப் பார்ப்பார்கள்.உண்மையில் அவன் ஒரு ஒற்றன்.மக்களோடு மக்களாக இருந்து,ஊர் ஊராகச் சுற்றி தகவல்களைச் சேகரித்து மன்னனுக்கு அனுப்புவதுதான் அவன் பணி.
சும்மா சொல்லக்கூடாது.அதாவுல்லாஹ், ஹக்கீம்,ரிஷாட் என்ற மூன்று அரசியல் வாதிகளில் ராஜ தந்திரமாக நடந்து கொள்பவர் யார் என்று கேட்டால் நான் தயக்கமில்லாமல் ரிஷாட் என்று கூறுவேன்.
ஹக்கீமும்,அதாவுல்லாஹ்வும் சமூகத்தை ஏய்த்துப் பிழைத்தவர்கள்தான்.ஆனால் அவர்களின் நாடகங்கள் ஏதோ ஒரு தருணத்தில் அம்பலமாகிவிடும்.மக்களும் அவர்களின் உண்மையான சுயரூபத்தைப் புரிந்து கொள்வார்கள்.
ஆனால் ரிஷாட் அவர்கள் அரசியல் நடத்தும்போது மக்களை ஏமாற்றுவது மக்களுக்குப் புரியாதவாறு அதன் சுற்றுப்புறச் சூழலை அமைத்துவிடுவார்.தங்களுக்கு தலைவர் நன்மை செய்கிறார் என்று மக்கள் நினைக்குமளவிற்கு அந்த வித்தையை அவர் அரங்கேற்றிவிடுவார் என்றால் அவர் அரசியலில் வயது குறைந்தவர் என்றாலும் மக்களின் கண்களைக் கட்டி கழுத்தை கட்டுவதில் மிகவும் ஒரு திறமைசாலி என்றுதான் கூற வேண்டும்.ஆனால் கழுத்தை தலைவர் மசாஜ் பண்ணுகிறார் என்று மக்களை நம்பவைக்கும் திறமையில்தான் அவர் ஹக்கீமிலிருந்தும் ,அதாவுல்லாஹ்விலிருந்தும் வேறுபடுகிறார்.
முஸ்லீம் காங்கிறஸில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் தங்களின் புதுக்கட்சிக்கு காங்கிறஸ் என்ற ஒரு பகுதியையும் சேர்த்துக்கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.அரசியல் என்றால் காங்கிறஸ்தான் என்று மக்கள் நம்பியபோது காங்கிறஸ் என்று இல்லாத எந்தக்கட்சியும் மக்களின் மத்தியில் வேகாது என்பதற்காகத்தான் அதாவுல்லாஹ் தேசிய “காங்கிறஸ்” என்று வைத்துக்கொண்டார். ரிஷாட் மக்கள் “காங்கிறஸ்” என்று வைத்துக்கொண்டார்.சரி அதாவுல்லாஹ் காங்கிறஸில் இருந்தவர் என்ற அடிப்படையில் காங்கிறஸ் என்ற பெயரை அரசியல் லாபங்களுக்காக வைத்துக்கொண்டார் என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் ஏன் வைத்தீர்கள்?உங்களுக்கும் காங்கிறசுக்கும்தான் எந்தத் தொடர்பும் இல்லையே.2001 பொதுதேர்தலில் நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டீர்கள்.பின்னர் காங்கிறஸுக்குப் பாய்ந்தீர்கள்.பின்னர் காங்கிறஸ் என்ற பெயரை வைத்து தனிக்கட்சி ஆரம்பித்தீர்கள்.வரலாறு தெரியாத மக்களும் உங்களை நம்பிவிட்டார்கள்.அதனால்தான ் கூறினேன் நீங்கள் அனைவரையும் விட ஆபத்தானவர் என்று.
அரசியலில் DETRACTION என்று ஒரு வியூகம் இருக்கிறது.அதற்கு கவனத்தை வேறு பக்கம் திருப்புவது என்று பொருள்.ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தில் அரசியல் வாதிகள் சிக்குவது போல் இருந்தால் உடனே மக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்புவதுதான் இந்த தந்திரம்.கிரிகட் நடக்கும் போது மின்சாரத்தின் விலையைக் கூட்டுதல்,ஐநாவில் பிரேரணை கொண்டுவரும்போது ஹலால் பிரச்சினையைப் பெரிதாக்குதல் எல்லாம் இந்த தந்திரத்துக்குள் அடங்குபவைதான்.வில்பத்து பிரச்சினை இதற்கு ஒரு அழகிய உதாரணம்.வில்பத்து விவகாரத்தை வைத்து ஒரு அற்புதமான அரசியலைச் செய்துவிட்டார் ரிஷாட் அவர்கள்.
வில்பத்துவில் மக்களைக் குடியேற்றுவதற்காகவும்,அவர் கள் வாழ்வாரத்திற்கு வழிகோருபவராகவும் தன்னைக் காட்டிகொண்டு மக்களின் மனதில் முஸ்லீம்களின் ஒரு கதாநாயகன் என்ற பெயரையும்,முஸ்லீம்களை மீட்க வந்த மூஸாவாகவும் தன்னைக் காட்டிக்கொண்டதனால் வில்பத்துவிவகாரத்தின் உண்மை நிலை மறைக்கப்பட்டுவிட்டது.காடை அழித்த காரணம் வேறு.ஆனால் காட்டை அழித்தது மக்களை குடியமர்த்த என்ற ஒரு நாடகத்தை அற்புதமாக நடத்திவிட்டார் ரிஷாட் அவர்கள்.காடழிப்புக்குப் பின்னால் மஹிந்தவின் குடும்பம் இருந்ததையும் மக்கள் மறந்துவிட்டார்கள். அந்த நன்றிக்கடனுக்காகத்தான் மஹிந்தவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் சிறையிலுக்கும் போது சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார் ரிஷாட் அவர்கள்.அதனால்தான் கூறினேன் அவர் ஆழ்வார்க்கடியானையே மிஞ்சிவிட்டார்.
மஹிந்தவை விட்டு முதலில் சென்றவர் எங்கள் தலைவர்.அதன் பின்னர்தான் மற்றவர்கள் சென்றார்கள் என்கிறார்கள் அவரின் கண்மூடித்தனமான ஆதரவாளார்கள்.கொலை செய்துவிட்டு முதலில் தப்பியோடியதால் அவரை யாரும் மகானென்பதில்லையே.முழு முஸ்லீம் சமூகத்தையும் கொலைசெய்துவிட்டு நீங்கள் முதலில் தப்பினீர்கள்.மற்றவர்கள் பிறகு தப்பினார்கள் அவ்வளவுதான்.
இணையத்தில் அவரைப் பற்றித்தேடிக்கொண்டு செல்லும் பொழுது பெரும்பாலான இணையங்கள் அவரை ஒரு மகானாகவே காட்ட முற்படுகின்றன.அதுதான் எனக்கு முதலில் உதைத்தது.சற்று விசாரித்துப் பார்த்தேன்.அனைவரையும் வாங்கியிருக்கிறார் அவர்,தனக்கு எதிராகப் பேசுபவர்களை அழகாக அடக்கிவிடுகிறார்.தனக்கு எதிரானவர்களை ஒன்று அழிக்கவேண்டும் அல்லது வாங்கவேண்டும்.இது மாக்கியவல்லியின் கருத்து.மஹிந்த அழித்தார்.ரிஷாட் வாங்கியிருக்கிறார் போல் விளங்குகிறது.
ஏற்கனவே அம்பாரை முஸ்லீம்களின் அரசியலை கர்ப்பழித்துவிட்டார்கள் இந்த அரசியல் வாதிகள்.ஒரு காலத்தில் இலங்கையின் ஆட்சியைத் தீர்மானித்த எமது மாவட்ட அரசியல் ஹக்கீம்,அதாவுல்லாஹ் போன்றாரால் நாதியிழந்துவிட்டது.இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்கு வந்ததன் பின்னர் இன்னுமொரு அரசியல் சகுனி எங்கள் பிரதேசத்திற்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
இந்த இருவரிடமிருந்தும் எமது முஸ்லீம்களைக் காப்பாற்றுவதற்கே இத்தனை கஷ்டப்படும்போது இன்னொரு எட்டப்பனோடு போட்டிபோடும் சக்தியும்,தைரியமும் எங்களிடம் இல்லை.
எல்லா அரசியல்வாதிகளும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தங்கள் அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பயன்படுத்துகிறார்கள். ஏன் அம்பாரை மாவட்டம் இவர்களின் கண்களுக்கு அதிகமாகப் படுகிறது?ஏன் எல்லோரும் அம்பாரை அரசியலில் குறிவைக்கிறார்கள்?அது முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பிரதேசம் என்பதற்காகவா?.நான்கு அரபி வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு வந்தால் வாக்கு விழும் என்ற அபரிதமான நம்பிக்கை அவர்களுக்கு.எத்தனைபேர் அரசியல் லாபம் கண்டுவிட்டுப் போய்விட்டார்கள்.எத்தனை முகவரி இல்லாதவர்கள் எம் வாக்குகளைப் பாவித்து பாராளுமன்றத்திற்கும் போய்விட்டார்கள்.அவ்வாறிருந ்தும் ஏன் முஸ்லீம்களின் பள்ளிகள் உடைக்கப்பட்டன?ஏன் எமது கடைகள் எரிக்கப்பட்டன?ஏன் ஹலால் பிரச்சினை உருவெடுத்தது? ஏன் கெறீஸ் மனிதர்கள் எங்கள் பெண்களைப் பிராண்டினார்கள்?
வாக்குகளுக்கு மட்டும் இவர்களுக்கு முஸ்லீம்கள் தேவை.அடுத்த தேர்தல் வரும்வரைக்கும் நாங்கள் இவர்களுக்கு ஒரு வெற்றுக்காகிதம்.விரும்பியவ ர்கள் விரும்பியதை எழுதுவார்கள்.விரும்பியவர்க ள் கிழிப்பார்கள் அடுத்த தேர்தல் வரும்வரைக்கும்.
எமது சமூகத்தின் தீர்வு எமது அரசியல் வாதிகளின் கைகளில் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளும் வரைக்கும் நாங்கள் அவர்களால் பாவிக்கப்படும் சமூகமாகவே தொடர்ந்தும் இருப்போம்.
இது மயிலல்ல.தோகை விரித்தாடும் பனங்காட்டு நரி.பார்த்து நடந்து கொள்ளுங்கள்.
அம்பாறை, அக்கரைப்பற்று - ராசி ஜமீல்


0 Comments