Subscribe Us

காசினி கீரை தொக்கு



தேவையான பொருட்கள்: 

காசினி கீரை- 2 கோப்பை அளவு, 
மிளகாய் வத்தல்- 2 
கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி,
நல்லெண்ணெய்- தேவையான அளவு, 
மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி, 
சீரகத்தூள்-2 தேக்கரண்டி, 
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி, 
உப்பு- தேவையான அளவு, 
பூண்டு- சிறிதளவு. 

செய்முறை:-

• காசினி கீரையை சுத்தம் செய்து, தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். கொதி நிலைக்கு வந்த பின்பு, மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள் போட்டு கிளறவும். கீரை கூழாக வெந்த பின்பு, வத்தலை கிள்ளி போட வேண்டும். பூண்டு, உப்பையும் சேருங்கள். 

• வேறு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து, அதை கீரையுடன் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் கீரையிலும் சிறிதளவு எண்ணெய் சேர்க்கலாம். 

• கீரை நன்றாக மணம் வீசும் போது, காசினி கீரை தொக்கு தயார் ஆகிவிடும். அப்போது, அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். 


மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE

Post a Comment

0 Comments