-The Puttalam Times-
”அனஸ்“. அதுதான் அந்த மனிதரின் பெயர். மத்திபமான உடற் பருமன் கொண்ட, உயரம் குறைந்த மனிதர். எப்போதும் எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதுபோல முகபாவம். அமைதியாக இருப்பார், அதிகம் பேசமாட்டார். காலையில் கடை வியாபாரம். மஃரிப்புக்குப் பின் ஆட்டோ ஒட்டுவார். நூர் பள்ளிப் பக்கமாக ஆட்டோ தொழில் புரிபவர்கள் பின்னந்தி நேரத்தில் ஓய்வு பெறும்போது அங்கு ஏற்படும் குறையை நிரப்ப அனஸின் ஆட்டோ அங்கு போகும்.
ஒரு சராசரி தினத்தின் வியாபாரத்துக்காக கடை திறக்கப்பட்ட நேரத்தில் இருந்து அனஸின் மகன் பஸால் வாப்பாவோடு இருந்து குடும்ப வியாபாரத்தைக் கவனிப்பார். அந்த இளம் பையன் பஸால் வெளியே போய் நாலுபேரோடு சுற்றித் திரிந்து காலத்தை வீணடித்ததை யாரும் கண்டதில்லை. மாலையில் வாப்பா ஆட்டோ ஒட்டப் போனால் மீதியான நேரத்தில் மகன் கடைக்கு முழுப் பொறுப்பு. நான் அனஸையும், பஸாலையும் கண்டுவந்த நாட்களில் யாரோடும் ஒரு சிறு வாய்த் தர்க்கம் தானும் செய்வதை கண்டதில்லை. மொத்தத்தில் அப்பாவி வாப்பாவும் மகனும்.
நூர் பள்ளிப் பக்கமாக வான் வீதியை நோக்கித் திரும்பும் இடத்தின் தொடக்கத்தில் இருந்து மூன்றாவது கடை அவர்களடையது. ஒரு சின்ன சில்லறைக் கடை. ஆனாலும் புத்தளத்தில் அந்தக் கடையின் பெயர் என்னவோ புத்தளம் காக்கில்ஸ் பூட் சிற்றி போல பிரபல்யமானது அவர்களின் "சவுதி ஸ்டோர்”. அந்தக் கடை திறந்திருக்கும் நேரம்தான் அதிகம். இனி இல்லை என்ற அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தால் அன்றி அது பின்னிரவுக்கு முன்னர் மூடப்பட்டதை யாரும் கண்டதில்லை.
சற்றேத்தாழ ஒரு வருடம் அளவில் இருக்கக் கூடும் என்று எண்ணுகிறேன். அனஸின் மகள் திருமணத்துக்காக அந்த கடை ஒரு நாள் மூடப்பட்டபோது அது நகரத்தில் ஒரு பேச்சுப் பொருளாக, ஒரு ஹாய்யத் துணுக்காகக் கூட வந்திருந்தது. காசு மேல் அவ்வளவு அன்பு அவருக்கு என்று கொஞம் கொச்யைாகச் சொன்னவர்களும் இருக்கிறார்கள்.
ஆளுக்கொரு தேதி வைத்து அழைத்துக் கொள்ளும் அல்லாஹ் அனஸையும் அழைத்துக் கொண்டது மிக அண்மையில்தான். மீண்டும் ஒரு நாள் அந்தக் கடை மூடப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து இப்போதெல்லாம் அந்தக் கடை பகல் நேரத்தில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் மூடப்படுகிறது. அது இப்போது எல்லோருக்கும் ஒரு அசௌரியம். எல்லோருக்கும் அந்த அசௌகரியம் மிகப் பெரிய சிரமத்தைத் தருகிறது.
அனஸின் மகளின் திருமணத்தின்போது கடை மூடப்பட்டதை வேடிக்கைத் துணுக்காகப் பேசி மகழிந்வதர்கள் இப்போது அந்த அசௌகரியத்தை உணருகிறார்கள், சற்று அதிகமாகவே உணருகிறார்கள்.
கைக்கெட்டிய தூரத்தில் எதுவும் இருக்கையில் நமக்கெல்லாம் அதன் பெறுமானம் தெரிவதில்லை. அது கை நழுவிப் போய்விட்ட பின்னர்தான் அது உணர்த்தும் பாடத்தின் பெறுமானம் தெரிகிறது. இப்படி நகரில் பல விடயங்கள்.
நகரில் மீ்ன் பிடித் தொழிலில் ஈடுபடுவோரை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. பேக்கரிக்காரர்களை யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. எல்லோரும் இரவு வேளைகளில் தூங்கப்போகும்போது அவர்கள் தமது தொழிலில் ஈடுபடுகிறார்கள். பெருந் தொகையினருக்காக அவர்கள் சிரமப்படுகிறார்கள். அது அவர்களின் உழைப்பு மாத்திதிரமல்ல. ஒரு சேவை. நகரில் உள்ள நாலு பேக்கரிக்காரர்கள் ஒரு நாளைக்கு தமது செயற்பாட்டிலிருந்து நீங்கிக் கொண்டால் மறு நாள் காலையில் எல்லோரும் வீதிகளிலே ”லோ.....லோ..”” என்று அலைவததைக் காணலாம். இப்போதுதான் அது ஒரு முக்கியமான சேவை என்பது புரிய வருகிறது.
அந்த சேவைதான அனஸின் சவதி ஸ்டோர் மூலமாகக் கிடைத்தும். ஆனாலும் எத்தனை பேருக்கு சேவையின் அர்த்தம் தெரிகிறது. பெறுமானம் புரிகிறது ?
0 Comments