ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
விஜித் விஜயமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, எம்.கே.டி.எஸ். குணவர்தன, கடந்த தேர்தலில் ஜனாதிபதியின் சார்பில் குரல் கொடுத்திருந்தனர்.
எம்.கே.டி.எஸ். குணவர்தனவைத் தவிர்ந்த ஏனையவர்கள் தேர்லில் தோல்வியடைந்திருந்தனர் அல்லது வெற்றியீட்டியிருந்தாலும் குறைந்த விருப்பு வாக்குகளையே பெற்றுக்கொண்டிருந்தனர்.
மஹிந்த தரப்பினர் இவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என கோரியிருந்தனர்.
எனவே இவர்களுக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரி வருகின்றனர்.
ஜனாதிபதிக்காக குரல் கொடுத்து அர்ப்பணிப்புக்களைச் செய்தவர்களை உரிய பதவிகளில் அமர்த்த வேண்டியது அவசியமானது என கட்சியின் ஒரு தொகுதியினர் கோரி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


0 Comments