பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் ஊடாக இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.
நாட்டின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமைக்காக வாழ்த்து தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஸ அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அமோக வெற்றியீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமலின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வில் நேரடியாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments