Subscribe Us

குழந்தை பிறந்த பின்னரும் தம்பதியரிடையே அன்னியோன்யம் அதிகரிக்க என்ன செய்யலாம்?...



பொதுவாக குழந்தை பிறந்த பின்னர் கணவன், மனைவிக்கு இடையே ஈர்ப்பும் அன்னியோன்யமும் குறைவதாக கருத்து நிலவி வருகிறது. இதை பொய்யென நிரூபிக்கும் வகையில் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு மாணவர்கள், சமீபத்தில் நடத்திய சமூக நலன் சார்ந்த ஆய்வில், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து குழந்தைகளை கவனித்துக்கொள்வது அவர்களுக்குள் அன்னியோன்யத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலையை தம்பதி இருவரும் சேர்ந்து கவனிக்கும்போது அவர்களுக்குள் ஏற்படும் புரிதல், அன்னியோன்யம் அதிகரிக்க காரணமாகிறது.

இதுவே, அவர்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு நீயா? நானா? என்று குழந்தையை கவனிப்பதால் உண்டாகும் பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் நிச்சயம் யாருக்கும் நன்மை பயக்காது என்பதே நிதர்சனமான உண்மை. 

காதலுக்கு வயதோ, முதிர்ச்சியோ அல்லது குழந்தையோ காரணமாகாது என்பதை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே!

Post a Comment

0 Comments