பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்து இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வாழ்த்து தெரிவித்து இன்றைய சபை அமர்வில் உரை நிகழ்த்தினார்.
கிழக்கு மாகாண சபை அமர் இன்று காலை 9.30 மணிக்கு பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் ஆரம்பமானது.
இன்றைய சபை அமர்வின்போது கிழக்கு மாகாண சபையில் அமைச்சர்களாவும், உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள் ஐந்து பேர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் எம்மை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றி அவர்களுக்கு முன்னு ரிமை வழங்கிய ஒரு பிரதிநிதியாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
அதனைத்தொடர்ந்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், அமைச்சர்களான துரைராஜசிங்கம், ஆரியபதி கலபதி, தண்டாயுதபாணி, மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பல உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினர்.
0 Comments