Subscribe Us

header ads

எமது அர­சாங்­கத்தில் தேசிய பிரச்­சினை விட­யத்தில் உரிய முறையில் செயற்­பட தவ­றி­விட்டோம் : கெஹெ­லிய

மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் சேர்ந்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தேர்தல் மேடையில் ஏறி­யி­ருந்தால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி நிச்­சயம் ஆட்சி அமைத்­தி­ருக்கும். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னதும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னதும் தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்தல் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தால் நாங்கள் நிச்­சயம் ஆட்சி அமைத்­தி­ருப்போம் என்று கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.
கடந்த 2010 முதல் 2015 வரை­யான காலப்­ப­கு­தியில் தேசிய பிரச்­சினை தீர்வு விவ­கா­ரத்தில் நாங்கள் பின்­ன­டை­வையே சந்­தித்­தி­ருக்­கிறோம். யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனதை வெல்­வ­தற்கு எம்மால் முடி­ய­வில்லை. அந்த மக்­களின் மனக்­கு­ழப்­பங்­க­ளுக்கு தீர்வு காண முடி­யாமல் போய்­விட்­டது. இது பின்­ன­டை­வுதான் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
நடந்து முடிந்த தேர்தல் முடி­வுகள் மற்றும் தேசிய அர­சாங்க செயற்­பாடு என்­பன தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,
கேள்வி:- தேர்தல் முடி­வுகள் தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன?
பதில்:- நடந்து முடிந்த பாரா­ளு­மன்­றத்­தேர்தல் முடி­வு­களை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கின்றோம். தேர்தல் மிகவும் சுயா­தீ­ன­மா­கவும் நடை­பெற்­றது. அந்த வகையில் தேர்தல்கள் ஆணை­யா­ளரின் அறி­விப்­பையும் முழு­ம­ன­துடன் ஏற்­றுக்­கொள்­கின் றோம். எவ்­வா­றெ­னினும் தேர்தல் முடி­வு­களில் மூலம் பிர­ப­ல­மான எதிர்க்­கட்சி உரு­வா­கி­யுள்­ளது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு 95 ஆச­னங்கள் கிடைத்­துள்­ளன. இதன் மூலம் சிறந்த எதிர்க்­கட்­சியே உரு­வா­கி­யுள்­ளது. வழ­மை­யாக எதிர்க்­கட்­சிக்கு இந்­த­ளவு ஆச­னங்கள் கிடைப்­ப­தில்லை. ஆனால் இம்­முறை அதிக ஆச­னங்கள் கிடைத்­துள்­ளன.
கேள்வி:- தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ உங்கள் கட்­சியில் மிகப் பிர­தான கதா­பாத்­தி­ரத்தை வகித்­தி­ருந்­தாரே?
பதில்:- ஆம், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ தேர்­தலில் எமது கட்­சியில் பிர­தான பாத்­தி­ரத்தை வகித்­தி­ருந்தார். அவரால் தான் இந்­த­ளவு ஆச­னங்­களை நாங்கள் பெற்­றுள்ளோம். இல்­லா­விடின் குறைந்த ஆச­னங்­க­ளையே பெற்­றி­ருப்போம். ஆனால் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் சேர்ந்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தேர்தல் மேடையில் ஏறி­யி­ருந்தால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி நிச்­சயம் ஆட்சி அமைத்­தி­ருக்கும். அதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னதும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னதும் தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்தல் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தால் நாங்கள் நிச்­சயம் ஆட்சி அமைத்­தி­ருப்போம்.
கேள்வி:- எவ்­வா­றெ­னினும் தற்­போது தேசிய அர­சாங்கம் அமை­யப்­போ­கி­றதே?
பதில்:- ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் நேர்­மை­யாக செயற்­பட்டால் நிச்­சயம் இந்த தேசிய அர­சாங்க செயற்­பாட்டின் ஊடாக இந்த வெற்­றியைக் காண முடியும். இரண்டு பக்­கங்­க­ளிலும், நேர்மை வெளிப்­ப­டுத்­தப்­ப­டா­விடின் என்ன நடக்கும் என்று கூற முடி­யாது.
கேள்வி:- எதிர்­வரும் ஐந்து வரு­டங்­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?
பதில்:- ஐந்து வரு­டங்­களை நான் நன்­றா­கவே பார்க்­கின்றேன். ஆனால் நான் முதலில் கூறி­யது போன்று இரண்டு தரப்­பிலும் நேர்மை வெளிக்­காட்­டப்­ப­டு­மானால் வெற்­றியை நோக்கிப் பய­ணிக்­கலாம் என்ற நம்­பிக்கை உள்­ளது. எவ்­வா­றெ­னினும் தற்­போது மிகவும் தெளி­வான குழப்­பத்தில் நாம் இருப்­ப­தா­கவே உணர்­கின்றேன். நாடு அபி­வி­ருத்­தியில் பின்­ன­டைவு கண்­டு­வி­டுமோ என்ற பயம் எமக்கு உள்­ளது.
கேள்வி:- எதிர்­வரும் ஐந்து வரு­டங்­களில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண முடியும் என கரு­து­கி­றீர்­களா?
பதில்:- இந்த இடத்­திலும் நேர்மை என்ற விட­யமே பிர­தான இடத்தை வகிக்­கி­றது. தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பும் அர­சாங்­கமும் நேர்­மை­யாக இந்த விட­யத்தில் செயற்­பட்டால் நிச்­சயம் தீர்வைக் காண முடியும்.
கேள்வி:- 2010 முதல் 2015 ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் உங்­க­ளு­டைய முன்­னைய அர­சாங்கம் சரி­யாக செயற்­பட்­டதா?
பதில்:- அதி­க­மான விட­யங்­களில் எமது அர­சாங்கம் இக்­கா­லப்­ப­கு­தியில் சரி­யா­கவே செயற்­பட்­டது. ஆனால் ஒரு சில விட­யங்­களில் நாங்கள் சில பின்­ன­டை­வு­களை சந்­தித்­தி­ருந்தோம் என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறோம்.
கேள்வி:- அவ்­வாறு பின்­ன­டைவை சந்­தித்த ஒரு சில விடயம் என்­ன­வென்று கூற முடி­யுமா?
பதில்:- தேசிய பிரச்­சினை தீர்வு விவ­கா­ரத்தில் நாங்கள் பின்­ன­டை­வையே சந்­தித்­தி­ருக்­கிறோம். நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­திலும் மக்­களின் கல்வி சுகா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­திலும், நாங்கள் முன்­னேற்­ற­ம­டைந்­தி­ருக்­கிறோம். எனினும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்களின் மனதை வெல்லுவதற்கு எம்மால் முடியவில்லை. அந்த மக்களின் மனக்குழப்பங்களுக்கு தீர்வு காண முடியாமல் போய்விட்டது.
அந்த விடயத்தில் நாங்கள் பின்னடைவை சந்தித்தோம் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமது அரசாங்க காலத்தில் எமக்கு ஒத்துழைப்புடன் செயற்பட வில்லை. அவர்களும் எம்முடன் ஏட்டிக்குப் போட்டியாகவே செயற்பட்டு வந்தனர். எனவே இரண்டு தரப்பினரும் இந்த பின்ன டைவுக்கு பொறுப்புக் கூறியாக வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments