ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் நேற்று சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஜனநாயகம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்ட வேலைத்திட்டங்கள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில், நிஷா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் நியாயமாகவும் சமாதானமாகவும் நடைபெற்றமை தொடர்பிலும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டில் சமாதானம், சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு வழங்ககூடிய அனைத்து ஆதரவு வழங்குவதாக நிஷா பிஸ்வால், ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று காலை இலங்கை வந்தடைந்த அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் இன்று நாட்டில் இருந்து செல்கின்றார்.
0 Comments