Subscribe Us

அ.இ.ம.கா இன்று தேசிய ரீதியில் தலைமைத்துவத்தை வழங்கும் ஒரு கட்சியாக மக்களால் அங்கீகரிக்கபட்டுள்ளது



நடை பெற்று முடிந்த பொதுத்தேர்தல் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு எதிரான பிரசாரங்களை முகநுால்களும்,இணையத்தளங்களும்,சில பத்திரிகைகளும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றதை அவதானிக்க முடிகி்ன்றது.வன்னிக்குள் மட்டும் என்று பேசப்பட்டு வநத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று தேசிய ரீதியில் தலைமைத்துவத்தை வழங்கும் ஒரு கட்சியாக மக்களால் அங்கீகரிக்கபட்டுள்ளதை தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள் இந்த விமர்சனங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

ஒரு தனினிதாக வன்னி வாழ் சகல மக்களின் உரிமைக்குரலாக அரசியல் பிரவேசத்தை செய்த றிசாத் பதியுதீன் இன்று இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்,தமிழ்,சிங்கள மக்களுக்கு அரசியல் ரீதியான வழைிகாட்டல்களை வழங்கும் ஒருவராக மாறிவிட்டார் என்கின்ற செய்தியை எம்மால் கேட்கவும்,பார்க்கவும் முடிகின்றது.

இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவராக றிசாத் பதியுதீன் அவர்களை பல்வேறு அபை்புக்கள் இன்று பிரகடனப்படுத்தியுள்ள நிலையில்,அரசியலில் வஙகுரோத்து நிலையினையும்,பின்னடைவினையும் அடைந்த கட்சிகளும்,அமைப்புக்களும் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பிரசாரங்களை எடுத்து வருகின்றனர்.மழை ஓய்ந்து போன நிலையிலும் இன்னும் துாவானம் விடாத நிலையில் இந்த அரசியல் வங்குரோத்து சக்திகளின் செயற்பாட்டு இயக்கம் காணப்படுகின்றது.
17 ஆம்திகதி நடைபெற்று முடிந்த 8 வது பாராளுமன்றத் தேர்தலில் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாறையில் முதன் முறையாக தனித்து போட்டியிட்டு 35 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்ற போதிலும் ஒரு ஆசனத்தை சில நுாறு வாக்ககளினால் இழக்க நேரிட்டது.இந்த தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நீதி மன்றம் செல்ல போவதாக கட்சி தெரிவித்துள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்த வரையில் அம்பாறைக்கு ஒரு புதிய அரசியல் முகவரியினை தோற்றுவித்துள்ளது.இந்த தேர்தலில் இழக்கப்பட்ட பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை விட அடுத்துவரும்,மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களில் கட்சிக்கு அதிகப்படியான ஆசனங்கள் கிடைப்பதற்கான அடித்தளம் தற்போது போடப்பட்டுவிட்டது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை இம்முறை ஜக்கிய தேசிய கட்சியின் யாணைச் சின்னத்தில் போட்டியிட்மே 3 ஆசனங்கைளை பெறமுடிந்தது,அப்டியாயின் முஸ்லிம் காங்கிரஸின் தமது மரச் சின்னத்திற்கு இனிமேல் அம்பாறை மாவட்டத்தில் எந்தவித மதிப்பும் இல்லையென்பதை அங்குள்ள அரசியல் மூத்த தலைவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களில் இருந்து அறிந்து கொள்ளமுடிகின்றது.

குறிப்பாக வன்னியில் தனித்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து தனது ஆசனத்தை இழந்துள்ளது.இங்கு இக்கட்சியில் போட்டியிட்டவர்கள் ஏமாத்தப்பட்டுவிட்டார்கள்,என்பதுடன்,வடக்கு முஸ்லிம்களின் விடயங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் கடை பிடித்து வந்த மெத்தனப் போக்கும்,குழி பறிக்கும் செயற்பாடுகளால் விரக்தியடைந்த முஸ்லிம்கள் மு.கா்முற்றாக புறக்கணித்துள்ளனர்.இதற்கு முன்னர் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மர்ஹூம் நுார்தீன் மசூர் அவர்கள் வெற்றி பெற்றார்.அவரது காலத்தில் மு.கா.பலமிக்கதாக இருந்தது,அவரது மரணத்தின் பின்னர் பாராளுமன்றம் வந்த முத்தலி பாவா பாருக்,ஒரு சட்டத்தரணியாக இருந்ததால் அவரது தொழிற் துறை சார்பிலேயே அதிக கவனத்தை செலுத்தினாரே தவிர மு.கா.வளர்ப்பதில் அவரது செயற்பாடுகள் பூஜ்ஜியமாகவே இருந்து வந்தது.அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து பணத்துடன் வந்தவர்களுக்கு மு.கா அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தது.இம்முறை தேர்தலில் பரசான் என்பவர் போட்டியிட்ட போதும்,அவரையும் மக்கள் நிராகரித்துவிட்டனர்.

தற்போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் பேசப்படுகின்றது.இவரைப் பொறுத்தவரையில் வன்னி மக்களுக்கு மட்டுமல்ல நாட்டு முஸ்லிம்களுக்கு துன்பங்கள் வருகின்ற போது அங்கு றிசாத் பதியுதீன் என்கின்ற ஒரு மனிதன் ஆஜராகிவிடுவார் என்கின்ற எண்ணத்தை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டார்.அரசியல் ரீதியாக சமூகத்திற்காக தன்னை அர்ப்பணம் செய்யும் ஒரு இஸ்லாமியனாக அவரை மக்கள் பார்க்கின்றமையினால் அவரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதை இந்த தேர்தல் முடிவில் இருந்து காணமுடிகின்றது.

தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையில் ஜக்கிய தேசிய கட்சியின் யாணைச் சின்னத்தில் வன்னி,மட்டக்களப்பு,திருகோணமலை,அநுராதபுரம்,குருநாகல்,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட வேபட்பாளர்களில் வன்னியில் றிசாத் பதியுதீன்,மட்டக்களப்பில் அமீர் அலி,திருகோணமலையில் மஹரூப்,அநுராதபுரத்தில் இஸ்ஹாக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.குருநாகலில் டாக்டர் ஷாபி 58 ஆயிரம் விருப்பு வாக்குகள் எடுத்துள்ள நிலையில் பட்டியலில் 8 வது இடத்தில் இருக்கின்றனார்.குருநாகலயினை பொறுத்த வரையில் வரலாற்று சான்றாக இந்த விருப்பு வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.இன்னும் சில மாதங்களில் நடை பெறவுள்ள வடமேல் மாகாண சபை தேர்தலில் தற்போது ஜக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெற்றுள்ள ஒருவர் மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடவுள்ளதால் அடுத்த பாராளுமன்ற பிரதி நிதித்துவம் டாக்டர் ஷாபிக்கு என்பது உறுதியாகியுள்ளது.அதே போல் புத்தளத்தில்  ஜக்கிய தேசிய கட்சி 5 ஆசனங்களை பெற்றுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நவவி சில நுாறு வாக்குகளினால் 6 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்  தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் தொடர்பில் கடந்த கால அரசியலில் இயலாத்தன்மை கொண்டவர்களும்,புத்தளத்திற்கு கிடைக்கவிருந்த இரு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்ய சுயேட்சை அணியும் பொறுப்பற்ற விமர்சனங்களை செய்துவருகின்றது.இவர்களது இந்த அரைவேக்காட்டு தனமான கருத்துக்கள் புத்தளம் மக்களை வெறுப்படையச் செய்துள்ளது.சில முகநுால்கள் இன்னும் பிரதேசவாத கருத்துக்களையும்,அமைச்சர் றிசாத்,நவவி மற்றும் டாக்டர் இல்யாஸ் போன்றவர்களை விமர்சிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதை காணமுடிகின்றது.

எதிர்காலத்தில் மீண்டும் இந்த சுயேட்சைகளுக்கு புத்தளம் மக்கள் இடம் கொடுப்பார்களெனில் எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் எமது பிரதி நிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்பதை இப்போதே நாம் எதிர்வு கூறலாக முன்வைக்கவிரும்புகின்றோம்.

புத்தளத்துக்கு கிடைக்க விருந்த வென்றெடுக்க வேண்டிய பாராளுமன்ற பிரதி நிதித்துவத்ரைத அழித்துவிட்டு இப்போது போலி சாட்டுக்களை கூறும் நபர்களினால் ஒரு போதும் புத்தளத்துக்கு விமோசனமும் ஈவிடிவும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எது எவ்வாறாக இருந்தாலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளம் மக்களுக்கு நன்றியுள்ளவர் என்பதை ஒரு போதும் மறக்கமாட்டார்.அவரது நகர்வும்,சிந்தனையும் புத்தளம் சமூகத்திற்கு நன்மையாகவே இருக்கும்.புத்தளத்துக்கு ஒரு பாராளுமன்றப் பிரதி நிதித்துவம் பெற வேண்டும் என்பதில் மிகவும் உணர்வுடன் செயற்பட்டவர்.அவரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை ஒரு சிலர் நன்கு அறிவார்கள்,அவர்கள் அல்லாஹ்விடம் அந்த அமானிதத்தை நிச்சயம் சொல்லுவார்கள்.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமைத்துவத்துவத்துடன் எதிர்காலத்தில் புத்தளம் நல்ல அபிவிருத்திகளை காணப்ப போகின்றது.பிரதேசவாதம்,பதவி மோகமும் கொண்டவர்களினால் ஒரு போதும் அவர்களுக்கு சமமாக உருவாகும் அரசியல் சக்திகளின் வளர்ச்சியனை ஜீரணித்துக் கொள்ளமுடியாது,ஏனெனில் அரசியலும்,பதவியும் அவர்களது சொந்த சொத்து என்று கட்டித்தழுவிக் கொண்டிருக்கின்ற நிலையில் இருந்து அவர்கள் விடுபடாதவரை புத்தளம் மக்கள் இழப்புக்களையே சம்பாதிக்க நேரிடும் என்பது எனது எதிர்வு கூறலாகும்.

-    அபூ அஸ்ஜத் -

Post a Comment

0 Comments