எதிர்காலம் குறித்து சிந்தித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கசுதந்திர முன்னணியினரிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
ஹபராதுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிலருக்கு மஹிந்தவை விட்டு விலக முடியவில்லை. எனினும் சிலர் விலகியுள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர்கள், கட்சியை பிளவுபடுத்தியுள்ளனர். எனவே அவர்களால் வெற்றி பெற முடியாது.
நாங்கள் எல்லோரும் இணைந்து புதிய நாட்டொன்றை உருவாக்க வேண்டும். புதிய நாட்டிற்காக கிராமங்களில் வசிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகாரர்களையும் இணைத்துக்கொள்வோம்.
எதிர்காலத்தை சிறப்பானதாக அமைப்பதற்கு புதிய அரசியலையும் உருவாக்க வேண்டும். 60 மாதங்களில் நாங்கள் புதிய நாடொன்றை உருவாக்குவோம்.
இந்த 60 மாதங்கள் நிறைவடையும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுத்தமாகிவிடும். எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகாக வாக்களிப்பதென மக்கள் சிந்தியுங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments