Subscribe Us

துமிந்த சில்வாவிற்கு அஞ்சி தலைமறைவாக உள்ளவர்கள் அனைவரும் வெளியில் வரவேண்டும் - ஹிருணிக்கா


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அஞ்சி தலைமறைவாக உள்ளவர்கள் அனைவரும் அவரிற்கு எதிராக சாட்சியமளிக்க முன்வரவேண்டும் என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய கூட்டணியின் வேட்பாளர் ஹிருணிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு தற்போது அரசியல் அதிகாரங்கள் இல்லை அவர் தற்போது சாதாரண நபர்,இதன் காரணமாக அவரிற்கு அஞ்சி தலைமறைவாக இருக்கும் அனைவரும் வெளியேவரவேண்டும் அவரிற்கு எதிராக சாட்சியமளிக்கவேண்டும்,

எனது தந்தை தொடர்பான வழக்கை மூவர் கொண்ட குழுவினர் விசாரணைசெய்வது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் தீவிர முயற்சிகளை கடந்த மூன்று வருடங்களில் மேற்கொண்டுள்ளளோம்.

முன்யை அரசாங்கத்தை தோற்கடிக்கவும் நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம்,முன்னைய அரசாங்கத்தை சேர்ந்த பலர் இந்த வழக்கை தடுக்க முயற்சிகைளை மேற்கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை தடு;க்க முயன்றார்,ஆனால் நாங்கள் அதனை அனுமதிக்கவில்லை,என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments