இலங்கையர்களுக்கு கிரிக்கெட்டைப் போல் அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு பேஸ்பால். விறுவிறுப்பான பேஸ்பால் ஆட்டத்தை பால்கனியில் உள்ள கேலரியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் கீழே விழுந்து பலியான சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா ஸ்டேடியத்தில் நேற்றிரவு, அட்லாண்டா பிரேவ்ஸ் மற்றும் நியூ யார்க் யாங்கீஸ் அணியினருக்கிடையே பரபரப்பான போட்டி நடைபெற்றது. ஆட்டத்தில் 7-வது இன்னிங்க்ஸ் தொடங்கிய போது, 40 அடி உயரமுள்ள கேலரியிலிருந்து திடீரென, ஒருவர் கீழே விழுந்தார். 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் தலையிலிருந்து ரத்தம் வழிந்தோடியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக அங்கு வந்த அட்லாண்டா காவல் துறையினர் அந்த முதியவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
0 Comments