பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்தது முதல் இன்று காலை வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 11 தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனக்கும், தனது குடும்பத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கொலை, ஊழல், மோஷடி தொடர்பான விசாரணைகளை நிறுத்துவதற்கு உதவுமாறு ஜனாதிபதியிடம் அவர் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால், பாராளுமன்றத்தில் பின்னாசனத்தில் அமர்ந்து கொண்டு மௌனமாக இருக்க தான் தயார் எனவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக உங்களுக்கு இருந்த அவகாசம் முடிந்துள்ளதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னர் இது குறித்து சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்குப் பதிலளித்துள்ளார் எனவும் செய்தி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.


0 Comments