Subscribe Us

header ads

ஐ.தே.க.-சுதந்திர கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­க த்தை அமைப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் கபீர் ஹாஷிம் மற்றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பதில் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க ஆகியோர் இந்த புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டனர்.
ரணில் விக்­கி­ர­ம­சிங்க இலங்­கை யின் பிர­த­ம­ராக நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி முன்­னி­லையில் பத­வி­யேற்­றுக் ­கொண்­டதன் பின்னர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னதும் சுதந்­தி­ரக்­கட்­சி­யின தும் பொதுச்செய­லா­ளர்கள் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னதும் சிறி­லங்கா கட்­சி­யி­னதும் சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள் முன்­னி­லையில் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டது.
அந்த வகையில் எதிர்­வரும் இரண்டு வரு­டங்­க­ளுக்­காக தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணங்­கி­யுள்­ளது.
அது­மட்­டு­மன்றி அமைச்சு பத­வி­களை பகிர்­வ­தற்கும் ஒரு பொறி­முறை பிரே­ரிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ஒரு பொறி­மு­றையின் அடிப்­ப­டையில் இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டையில் பகி­ரப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு நேற்று முன்­தினம் அங்­கீ­காரம் வழங்­கி­யது. அத்­துடன் இது தொடர்பில் ஆராய்ந்து யோசனை சமர்ப்­பிப்­ப­தற்கு குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் குழுவில் சுசில் பிரே­ம­ஜ­யந்த, அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, நிமல் சிறி­பால டி சில்வா, சரத் அமு­னு­கம உள்­ளிட்ட பலர் இடம் பெற்­றி­ருந்­தனர்.
இதே­வேளை அமைச்­ச­ர­வையை நான்கு துறை­க­ளாக பிரித்து அவற்றின் அடிப்­ப­டையில் பொறி­மு­றைக்கு அமைய அமைச்சுப் பத­வி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மையே சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இதன்­போது தன்­னு­டைய அர­சாங்கம் எவ்­வாறு இருக்கும் என்­பது குறித்து பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஜனா­தி­ப­திக்கு விளக்­க­ம­ளித்­துள்ளார். அத்­துடன் தேசிய அர­சாங்­கத்தை அமைத்து முன்­கொண்டு செல்­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
மேலும் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு இடை­யி­லான சந்­திப்­பின்­போது தேசிய அர­சாங்­கத்தை எவ்­வாறு அமைப்­பது என்­பது தொடர்­பா­க­வும விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது. இவற்றின் அடிப்­ப­டை­யி­லேயே தற்­போது தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு இரண்டு கட்­சி­களும் இணக்கம் வெளி­யிட்­டுள்­ளன.
பொது கருத்­தொ­ரு­மை­மிக்க அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்கு அனைத்து அர­சியல் கட்­சி­களும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கடந்­ஙத புதன்­கி­ழமை சகல அர­சியல் கட்­சி­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார்.
நாட்­டுக்­கா­கவும், மக்­க­ளுக்­கா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அனை­வரும் ஒன்­று­பட்டு இணக்­கப்­பாட்டு அர­சி­யலை முன்­னெ­டுப்போம் எனத் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதற்­காக அர­சாங்­கத்­துடன் அனைத்து அர­சியல் கட்­சி­களும் இணைய வேண்­டு­மென்றும் பகி­ரங்­க­மாக வேண்­டுகொள் விடுத்தார்.
தேர்­த­லுக்கு பின்னர் எதிர்­வரும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தேர்தல் காலத்தில் கூறி­வந்தார். அத்­துடன் கடந்த ஜன­வரி மாதம் எட்டாம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் இவ்­வாறு எதிர்­வரும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி 106 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டது. ஐக்­கிய தேசிய கட்சி கூடுதல் ஆச­னங்­களை பெற்­ற­மை­யினால் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக முடியும் என்­பதால் ஆட்­சி­ய­மைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.
அத்­துடன் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கே பிர­தமர் பத­வியை பெறு­வ­தற்கும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­மான உரிமை காணப்­ப­டு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சேன முன்­னி­லையில் பிர­த­ம­ரா­கவும் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களையும் பெற்றன. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தலா ஆசனத்தை கைப்பற்றின.
ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் மூன்றாவது சக்தியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

Post a Comment

0 Comments