Subscribe Us

header ads

நாளை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை


இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்படும் தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை காலை ஆரம்பமாகிறது.
நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் இப்பரீட்சைக்கு  3 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இப்பரீட்சை நாடளாவிய ரீதியில் 2907 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன.
பரீட்சைக்கு பிள்ளைகளை அழைத்து வந்ததன் பின்னர் பரீட்சை மண்டப வளவுக்குள் பெற்றோர் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. இடைவேளை நேரத்திலும் பெற்றோர் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது.
பரீட்சைக்குத் தோற்றும் தமது பிள்ளைகளை நேர காலத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு அழைத்து வருமாறும் பரீட்சைகள் ஆணையாளர் சகல பெற்றோர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments