Subscribe Us

header ads

நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி! மார்தட்டுகிறது ஜே.வி.பி


நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யாராக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் ஜே.வி.பி.யே எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள டில்வின் சில்வா,

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக யாரும் வரலாம். ஆனால் அவர்கள் பெயரளவு எதிர்க்கட்சித் தலைவராகவே இருப்பார்கள். எதிர்க்கட்சியின் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றும் கட்சியாக எமது கட்சியே இருக்கும்.

அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பலத்தை எங்களுக்குத் தருமாறு நாங்கள் கடந்த தேர்தலில் பொதுமக்களிடம் வேண்டுகோள் முன்வைத்தோம். அதனை ஏற்று எங்களுக்கு ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்காளர்கள் பெற்றுத் தந்துள்ளார்கள்.

இதனைக் கொண்டு பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் பொதுமக்களின் எதிர்க்கட்சியாக நாங்கள் செயற்படுவோம்.அதன் மூலம் பொதுமக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments