பழம்பாசி ஒரு சிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக
பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக இருக்கும்.
இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான முடிகள் இருக்கும்.
பயன்கள்:
பழம்பாசியின் இலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல், உடலின்
எடையை
குறையச்செய்தல், இரத்த அழுத்தம் குறையச் செய்தல் காய்ச்சல்,
நரம்புத்தளர்ச்சி, ஆஸ்த்துமா, வலிப்புகளைப் போக்குதல், வேர் எண்ணெய்
காயத்தைக் குணமடையச் செய்யும் தன்மையுடையது.
இதன் இலையுடன் சிறிது பச்சரிசி சேர்தரைத்துக் குழப்பிக் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.
20 கிராம் இலையைப் பொடியாய் அரிந்து அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து வடிகட்டிச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து 3 வேளை சாப்பிட மூலச்சுடு தணியும்.
இதை 20 மி.லி. அளவாகக் குழந்தைகளுக்குக் காலை மாலை கொடுத்து வர இரத்தக் கழிசல், சீதக் கழிசல், ஆகியவை தீரும்.

0 Comments