Subscribe Us

header ads

நாளை நடைபெறவுள் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்கள் கற்பிட்டியின் குரலில்


17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

மாலை தேர்தல் முடிந்தவுடன் முதலில் தபால்மூல வாக்கு முடிவுகளே வெளியிடப்படவுள்ளன.

அதனையடுத்து, தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

இதன்படி, இம்முறை தேர்தலின் முதலாவது தபால்மூல வாக்கு முடிவை இரவு 11 மணி முதல் நள்ளிரவுக்குள் வெளியிட முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்திற்கு மறுநாள் அதிகாலை முதல் வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டள்ளது.

இத் தேர்தலில் 196 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 35 அரசியல் கட்சிகள், 201 சுயேட்சைக்குழுக்கள் ஆகியவற்றை சேர்ந்த 6151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதே வேலை எமது கற்பிட்டியின் குரல் நிருவாகம் கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பிரசுரித்ததும் குறிப்பிடததக்கது அதுபோன்று இம்முறையும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் கற்பிட்டியின் குரலில் பிரசுரிக்க தீர்மானித்துள்ளதையிட்டு மகிழ்ச்சியுடன் அடைகிறோம்.

எமது LIKE PAGE (விருப்ப பக்கம்) மற்றும் Group (குழுமம்) இத்துடன் இணைந்திருப்பதன் மூலம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் அதற்காக கீழ் இணைக்கப்பட்டுள்ள இணைப்புடன் இணைந்து இருங்கள்


Post a Comment

0 Comments