உலகம் முழுவதும் கடைவிரித்துள்ள பிரபல பாஸ்ட் புட் நிறுவனமான மெக்டொனால்டு ஏழைகளுக்கு உணவு கொடுக்க கூடாது என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.
பிரான்சில் இருக்கும் ஒரு மெக்டொனால்டு கடை நிர்வாகம், தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு சுற்று அறிக்கையை அனுப்பியது. அதில், “வீடு இல்லாத, நாடோடி ஏழை மக்களுக்கு உணவு கொடுக்க கூடாது. மெக்டொனால்டு பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உணவு கொடுப்பதற்காக இந்த நாட்டில் கடை வைத்திருக்கவில்லை” என தெரிவித்திருந்தது.
முன்னதாக அந்த கடையை சேர்ந்த ஊழியர் ஒருவர் தனக்கு கடை நிர்வாகம் கொடுக்கும் உணவை, கடைக்கு அருகில் இருந்த வீடற்றவர்களுக்கு கொடுத்ததை தொடர்ந்து தான் மேற்கூறிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையானது டுவிட்டரில் வெளியிடப்பட்டு கடும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் தங்களுடைய ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை தனிப்பட்ட வகையில் யாரையாவது பாதித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளது.


0 Comments