Subscribe Us

header ads

அரச ஊழியர்களை நியமிக்கும் முழுப் பொறுப்பும் நாமல் ராஜபக்சவிடம்?


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை சேர்க்கும் பணிகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே கையாண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள் என பலர் தமது கட்சியினருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குமாறு நாமல் ராஜபக்சவிடமே எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இதனடிப்படையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் முழு அதிகாரங்களும் நாமல் ராஜபக்சவிடம் இருந்துள்ளதுடன், நடைமுறைகளை பின்பற்றாது அரச துறைகளுக்கு ஊழியர்களை இணைத்து கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்ணநாயக்க, முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய ஆகியோர் தமது ஆதரவாளர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தருமாறு கோரி அனுப்பிய கடிதங்கள் வெளியாகியுள்ளன.

துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்த ரோஹித்த அபேகுணவர்தன தனக்கு சொந்தமான அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களில் தமது ஆதரவாளர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறு நாமல் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளமை மிகவும் பாரதூரமான சம்பவமாகும் என சிங்கள இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கு அமைய நாமல் ராஜபக்ச இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைச்சின் கடித தலைப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதங்களை வழங்கியுள்ளார்.

நீலப்படையணியின் உறுப்பினர்களுக்கு இலங்கை வங்கியில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதை எதிர்த்து அந்த வங்கியின் தலைவராக இருந்த காமினி விக்ரமசிங்க பதவியை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments