முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அதிகார பேரவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு, நாட்டை பல ஆண்டுகளுக்கு கடனாளியாக்கி அதனால் மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஒரே ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச அதிகார பேரசையினால் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு எப்படியாவது நாடாளுமன்றிற்குள் புகுந்துகொள்ள மஹிந்த முயற்சிக்கின்றார்.
மக்களின் கோரிக்கையினால் அரசியலில் மீளப் பிரவேசித்ததாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.
அவ்வாறு மக்கள் ஆதரவு இருந்திருந்தால் மஹிந்த தோல்வியடைந்திருக்க மாட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பாருங்கள்.
மக்கள் பணத்தை கொள்ளையிட்ட ஊழல் பேர்வழிகளே கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர்.
குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றால், நன்றாக விசாரணை செய்து நீதிமன்றில் சந்தேகமின்றி சாட்சியங்களை நிரூபிக்கக் கூடிய வகையில் சாட்சியங்கள் திரட்டப்படும். அதன் பின்னரே வழகுத் தொடரப்படும்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டால் அவர்கள் குற்றமற்றவர்கள் என அர்த்தப்படாது.
குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வத்தளை ஹெந்தளை பிரதேசத்தில் நiபெற்ற கூட்டமொன்றில் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


0 Comments