தேர்தல் பிரச்சாரத்திற்காக காட்சிப்படுத்தப்படும் சுவரொட்டிகள், பெனர்கள், கட்அவுட்களை அகற்றிக் கொள்ளுமாறு பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள், தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்க உள்ளனர்.
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அதிகளவு செலவு ஏற்படுவதாக வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கிராமப் பகுதிகளில் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு போதியளவு பணம் இல்லாத காரணத்தினால், சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பெனர்கள் ஊடாக பிரச்சாரம் செய்வதே இலகுவான வழி என குறிப்பிடுகின்றனர்.
எனினும் இம்முறை சுவரொட்டிகள், பெனர்கள் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
சில வேட்பாளர்கள் இது குறித்து கட்சித் தலைவர்களிடமமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறைந்த செலவில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்குமாறு வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


0 Comments