வீட்டில் ஏற்படக் கூடிய கணவன் மனனைவிக்கு இடையிலான தகராறு காரணமாக ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகள் அந்தக் குடும்பத்தையே சீரழித்துச் சின்னா பின்னப்படுத்தி விடுகினறன என்பதற்கு எத்தனையோ சம்பவங்கள் சாட்சிகளாகின்றன.
இவ்வாறான சம்பவங்களின் முடிகள் கோரமாகவும் கொடுமையானதாகவும் அமையும் போது அதனை அறிந்து மனித நேயம் கொண்டவர்களும் மனித உரிமைகளில் அதிகம் ஆர்வமும் பிடிப்பும் உள்ளவர்களும் அடையும் வேதனைகள் எல்லயைற்றவை. .அதற்கு நானும் நிச்சயமாக விதி விலக்கானவன் அல்லன்.
ஆனால், இன்று (16) ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பிரதேசத்தில் இடம்பெறவிருந்த ஒரு துயரமான சம்பவம் தடுக்கப்பட்டதன் காரணமாக மகிழ்ச்சியடைந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்களில் நானும் ஒருவன்.
தியத்தலாவவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வதயான குடும்பஸ்தர் ஒருவர் தனது 12 மற்றும் 5 வயதான மற்றும் 5 வயதான பிள்ளைகளுடன் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இறுதியாக அவர் தன்னுடன் முரண்பட்ட அல்லது தான் முரண்பட்டுக் கொண்ட அவரது மனைவியை கைத்தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வதற்காக ராவணா எல்ல பிரதேசத்தில் காணப்பட்ட ஓர் இளைஞரிடம் கைத்தொலைபேசியைப் பெற்று தனது இறுதி முடிவை மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
தனது கணவருக்காக அன்றியேனும் தனது செல்வங்களின் உயிர்கள் பறிக்கப்படப் போவதனை அறிந்த தாய் பதறிப் போய் அவர்களின் தற்கொலை முயற்சியைத் தடுக்குமாறு அந்த இளைஞனிடம் மன்றாடவே அதற்கிணங்க செயற்பட்டதால் அங்கிருந்த உல்லாசப் பயணிகள் மற்றும் பிரதேச மக்களால் அந்தத் தற்கொலைகள் அல்லது கொலைகள், தற்கொலை தடுக்கப்பட்டுள்ளன.
உடனடியாக அங்கு விரைந்த எல்லை பொலிஸார், அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை, அவர்களின் வீடு மூடப்பட்டிருந்ததனை அவதானித்த அயலவர்கள் வீட்டின் கதவினை உடைத்தே உள்ளே நுழைந்த பார்த்த போது பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முற்சித்த குடும்பத் தலைவன் அங்கிகருந்த சுவரில் இவ்வாறு எழுதியிருந்தார். “நானும் எனது பிள்ளைகளும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்யப் போகிறேன்“ என்று
பெற்றோர்களே! உங்களது சிறு சிறு பிரச்சினைகள், முரண்பாடுகளால் பச்சிளம் குழந்தைகளான உங்கள் செல்வங்களையும் நீங்கள் அழித்து விடாதீர்கள். அவ்வாறு நீங்கள் செய்வதானது மிகக் கொடூரமான பாவ காரியமாமாகவே முடிந்து விடும்.
நீங்கள் சேர்ந்து வாழும் வாழ்கை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்துப் பெற்று விடுங்கள். பிரிந்து விடுங்கள். ஒன்றுமே அறியாத பிஞ்சுகளின் உயிர்களை காவு கொள்ள வைத்து விடாதீர்கள்.
பாருங்கள் இன்று காப்பாற்றப்பட்ட இந்தக் குழந்தைகளின் அழகு முகத்தை இந்தக் குழந்தைகளைச் சாகடிப்பதற்கு யாருக்குத் தான் மனம் வரும். ஒன்றுமே அறியாத இந்த அப்பாவி குழந்தைகளும் வக்கிர மனம் படைத்த தந்தையுடன் வந்தமையானது எதற்கென்றே தெரியாத நிலையில்தானே? பாவம்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
நன்றி படங்களும் செய்தியும்
0 Comments