( எம்.எம் மின்ஹாஜ் )
பிரபல றக்பீ வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் குறித்த விசாரணைகள் ஒழுங்கு முறையின் பிரகாரமும் நீதியான முறையிலும் நடத்தப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாஜூதீனின் தந்தையிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும் விசாரணைகள் முடியும் வரை உறிவினர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு நான் பொறுப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் வஸீம் தாஜூதீனின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதன் விளைவாக இவரது மரணம் கொலையா அல்லது விபத்தா என்பதை விசாரணை செய்வதற்காக குறித்த வீரரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அவரது சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் பொலிஸார் மும்முரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வஸீம் தாஜூதீனின் உறவினர்கள் சடலம் குறித்தும் இந்த விசாரணைகளின் காரணமாக எமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடுமோ என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் ஜனாதிபதியை சென்று சந்தித்துள்ளனர்.
இதன்போது விசாரணைகள் முழுமையாக முடியும் வரை எமது உறவினர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு வஸீம் தாஜூதீனின தந்தை கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
பிரபல றக்பீ வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஒழுங்கு முறையின் பிரகாரமும் நீதியான முறையிலும் நடத்தப்படும். மேலும் விசாரணைகள் முடியும் வரை உறிவினர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு நான் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

0 Comments