Subscribe Us

இனியாவது மெதமுலனவுக்குச் சென்று மஹிந்த ஓய்வெடுக்க வேண்டும் : ரணில்

ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னு­டைய வெற்றி உறு­திப்­ப­டுத்தப்பட்­டுள்­ள­மை­யினால், ஜன­வரி 8 ஆம் திகதி மக்­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்பும் மீளவும் பிர­த­ம­ராக முனையும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்த தரு­ணத்­தி­லா­வது மெத­மு­ல­ன­விற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எச்­ச­ரிக்கை விடுத்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து நல்­லாட்­சியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நிரந்­த­ர­மான அர­சாங்கம் ஒன்றை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஒப்­ப­டைக்­கு­மாறும் அவர் கோரினார்.


இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் நிவித்தி­கல பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், 1974 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் நிவித்தி­கல பகு­திக்கு அப்­போ­தைய ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­­ய­லாளர் காமினி அத்­து­கோ­ர­ள­வுடன் வருகை தந்­தி­ருந்தேன். ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சிக்­கா­லப்­ப­கு­தியில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் அபி­வி­ருத்­திக்கு பாரிய ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்­தது. இதே­வேளை ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யக புரட்­சிக்கு நிவித்தி­கல மக்கள் ஆற்­றிய பங்­க­ளிப்பு மிகவும் அளப்­ப­ரி­யது. நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உயி­ரையும் தியாகம் செய்து ஜன­நா­யக புரட்­சிக்கு இந்த பிர­தேச மக்கள் உத­வி­ய­மையை நாங்கள் ஒரு­போதும் மறக்க மாட்டோம். எனவே 60 மாதங்­களில் புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் எமது திட்­டத்தில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் அபி­வி­ருத்­திக்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது.
ஆகவே இந்த சுதந்­தி­ரத்­தையும் நீதி­யான தேர்­த­லையும் தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும். இதன்­பி­ர­காரம் நாட்டின் நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. மேற்­படி நல்­லாட்சியை ஏற்­ப­டுத்தி நாட்டை சிறந்த திசைக்குக் கொண்டு செல்லும் பய­ணத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கு­ரிய நிரந்­த­ர­மான அர­சாங்­க­மொன்றை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பெற்று தர­வேண்டும்.
இதே­வேளை கடந்த பத்து வரு­டங்­க­ளாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தன்­னு­டைய குடும்­பத்தின் வளர்ச்­சியை மாத்­தி­ரமே பிர­தான குறிக்­கோ­ளாக கொண்டு செயற்­பட்டார். இதன்­கா­ர­ண­மாக ஜன­வரி 8 ஆம் திகதி மக்­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்டார். எனினும் மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட மஹிந்த ராஜ­பக் ஷ தனக்கு பிர­தமர் பத­வியை தரு­மாறு கோரி பாரா­ளு­மன்ற தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ளார்.
எனவே இம்­முறை பாரா­ளு­மன்ற தேர்­தலின் வெற்றி ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உறு­தி­யாகி விட்­டது. எனவே இந்த தரு­ணத்­தி­லா­வது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மெத­மு­ல­ன­விற்கு சென்று ஓய்வு எடுக்­க­வேண்டும் என்றே அவ­ருக்கு நான் எச்­ச­ரிக்கை விடுக்­கின்றேன் என்றார்.

Post a Comment

0 Comments