Subscribe Us

header ads

விஷேட தேவையுடைய ஒருவர் பாதையை கடக்க முயற்சித்தபோது பொலிஸ் உத்தியோகத்தரின் உதவி

அபு அலா –


அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் நற்செயலினை அவதானித்த பொதுமக்கள் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.

வாகனப் போக்குவரத்தும், சனநெரிசல்கள் அதிகமாக காணப்படும் வீதிகளில் ஒன்றுதான் அட்டாளைச்சேனை கடற்கரைக்குச் செல்லும் வீதியாகும். இந்த வீதியால் பயணித்த விஷேட தேவையுடைய ஒருவர் மாற்று வீதிக்கு செல்ல முற்பட்டும் அந்த வீதியை கடக்க முடியால் தின்டாடிய சம்பவம் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.

இச்சம்பவத்தை அவதானித்துக் கொண்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த நபரை பாதையை கடக்க அவருக்கு உதவி செய்ததை அப்பிரதேச மக்களும் வீதியால் போக்குவரத்துச் செய்த வாகன சாரதிகளும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டு தெரிவித்த இதேவேளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ் திணைக்களத்துக்கும் நன்றி தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments