Subscribe Us

தேர்தலுக்கு பின் நாட்டை ஆளப்போவது யார் மக்கள் சிந்திக்க வேண்டும்!– பெங்கமுவே நாலக தேரர்


தேர்தலுக்கு பின்னர் நாட்டை ஆட்சி செய்யப் போவது நாட்டை பாதுகாக்கும் நபர்களா என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால், நாடு பிளவுபடும் எனவும் அவர் ஏற்கனவே நாட்டை பிளவுபடுத்தும் உடன்படிக்கையை செய்து கொண்டவர் எனவும் ஒன்றியத்தின் உறுப்பினரான பெங்கமுவே நாலக தேரர் கூறியுள்ளார்.

நாட்டை பாதுகாக்கும் தலைவரான மஅகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்த மக்கள் தயாராக உள்ளனர். எனினும் அரசியல்வாதிகள் தயாரா என்பது தனக்கு தெரியாது எனவும் நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பாதுகாப்பு படையினரின் சம்பளத்தை அதிகரித்து, அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முடிந்துள்ள போதிலும் நாட்டை பாதுகாக்கும் உணர்வு படையினருக்கு இருப்பதால், அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments