ராஜபக்சவினர் வானத்திலும் பூமியிலும் கடலிலும் கொள்ளையிட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற செய்வதற்காக அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் அணித்திரண்டு வருகின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டங்களில் நான் மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளேன். எவராலும் தடுக்க முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளத்தால் ஐக்கிய தேசியக் கட்சி வலுவடைந்துள்ளது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


0 Comments