Subscribe Us

header ads

இலங்கைக்கு வெளியே வாழும் அனைவரும் ஒன்றுபட அழைப்பு - இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அபு அலா –

இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு வாழ் இலங்கை மக்கள் சுமார் 20 இலட்சம் பேர் வாக்குரிமயற்று இருப்பது கவலையளிக்கக்கூடிய விடயம் என்றும்நமது ஜனநாயக நாட்டில் வாக்குரிமையை ஒவ்வொரு இலங்கை பிரஜையும் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு வெளியே வாழும் ஒவ்வொரு இலங்கை பிரஜையும் அமைப்புக்களும் ன்றுபடுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்று இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார் நேற்று (29) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இலங்கைக்கு வெளியே வாழும் இலங்கையர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுத்தி அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைப்பெற அழைப்பு விடுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (29) அக்கரைப்பற்று ரீ.எப்.சீகேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அங்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் அழைப்பு விடுக்கையில்,
நாட்டை விட்டுப் பிரிந்ததால் இழந்த சுக போகங்கள்உறவுகள்திருமண பந்தங்கள், பிள்ளைகள், கணவன் மனைவியும் இழந்தவைகள் எத்தனை எத்தனை இவைகள் யாவும் மீள முடியாத மீட்க முடியாத கஷ்டங்களாகும். வேலை செய்யும் இடத்தால் சொல்லோன்னாத் துயரங்கள்மன அழுத்தம்துஷ்பிரயோகம் என்று சொல்லிக் கொண்டே ோகலாம்.
20 இலட்சம் தியாகிகள் உறவுகளுக்காக ஒரு வருடத்திற்கு அனுப்புகின்ற பணம் சுமார் ஒரு லட்சம் கோடிகள் இது நாட்டின் பொருளாதரத்தின் மிகப் பெரியபங்காளி என்பதற்கான சான்றாகும்துரதிஸ்ட சமாக உங்களுடைய குடும்ப நலனுக்கும் அரசாங்கம் செலவிடும் பணம் வெறும் பத்து கோடிகள் தான்.
எமது அரசாங்கம் உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் கரிசனை காட்டுவதில்லை அரசாங்கம் உங்களுக்காக செலவு செய்வதில்லை. ங்களது தொழிலுக்கு ஏதும் நடந்து நீங்கள் நாடு திரும்பினால் என் செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லைஅதற்கு அரசாங்கம் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை
இன்னொரு தொழிலை தேடிப்பெறும் வரைக்கும் உங்களுக்கொரு ஊதியத்தை அரசாங்கம் தருவதில்லை வெளிநாட்டி இருப்போரும் தங்கி வாழ்வோரும் ஒன்றுபட்டால் இந்த நாட்டின் ஆட்சியைக்கூட மாற்றலாம் இவ்வாறான ிலையில் அண்மையில் வெளிவந்த 19 ஆவது அரசியல் திருத்தத்தின் ஊடா இன்னொரு நாட்டின் பிரஜா உரிமையை கொண்டுள்ள இலங்கையர் பாராளமன்ற உறுப்பினராகக் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுஆனால் ஏனைய நாடுகளில் இவாவாறன நிலை இல்லை என்று பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார் புலம்பெயர் அமைப்புக்களும் தனி நபர்களும் ஒன்றுபட்டு அரசுக்கு சரியான அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் ாம் இழந்து நிற்கும் உரிமைகளைப்பெற வாய்ப்புள்ளது என்றும் அதற்காக தங்களுடன் இணைந்து கொள்ளுமாறும் அறைகூவல் விடுத்தார்.



Post a Comment

0 Comments