வடமேல் மாகாணத்தில் பச்சைப் பசேல் நெல் வயல்களையும், காடுகளையும்,உப்புத் தளம் , மற்றும் தென்னை சோலை . கடல் வளம் மலைத் தொடர்களையும் கொண்டிருக்கும் பசுமை நிறைந்த மாவட்டமான புத்தளம் பல்துறை சார்ந்த திறமைமிக்க இளைஞர்களைக் கொண்டு சிறந்து விளங்குகிறது.
அந்த வகையில் புத்தளத்தில் உள்ள திறமைமிக்க இளம் படைப்பாளிகளை இனங் கண்டு அவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவது புத்தளம் வாழ் மாவட்ட மக்களின் கடமையாகும் அந்த வகையில் இதற்கு முன்னர் புத்ளத்தில் தன் ஓவியங்களால் அனைவரையும் கவர்ந்திருந்த சகோதரர் மொஹமட் ஹஸ்னி அவர்களின் புகைப்பட தொகுப்புக்களை வழங்கி இருந்தோம் வழங்கியிருந்தோம்.
அதற்கான தொடுப்பு : https://www.facebook.com/media/set/?set=a.1040999799277708.1073741856.637719866272372&type=3
அதே போல் இன்று நாம் புத்தளத்தில் உள்ள ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரைப் பற்றியும், அவரது படைப்புக்களைப் பற்றியும் குறிப்பிட இருக்கின்றோம், அவர்தான் நிப்ராஸ் மொஹமட் என்ற புகைப்பட கலைஞர்.
நிப்ராஸ் மொஹமட் அவர்கள் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் என்பதையும் தாண்டி, பல்துறைகளிலும் தன் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவராவார், புகைப்படம், ஆவணப்படம் தயாரித்தல், சிறந்த ஒளிப்பதிவாளர், குறும்பட இயக்குனர் மற்றும் எடிட்டர் என்ற பல பரிமானங்களில் புத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
இவரது கெமறாவுக்குல் அகப்பட்டு சிறந்த புகைப்படங்களாக வெளிவந்தவைகள் இவரது புகைப்பட ஆற்றலை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது. அழகிய இயற்கை காட்சிகள், பறவைகள், புத்தளம் மாவட்டத்தின் நிகழ்வுகள் என இவரது கெமறாவுக்குல் அகப்பட்டவைகள் ஏராளம்.
இவரது கெமறாவுக்குல் அகப்பட்ட அழகிய புகைப்படங்களை நீங்களும் கண்டுகளியுங்கள்.
முகநூலில் நேரடியாக பார்வையிட : https://www.facebook.com/media/set/?set=a.1042344342476587.1073741858.637719866272372&type=3&uploaded=52
-இது கற்பிட்டியின் குரலின் படைப்பாகும்-
இவ்வாறான சிறந்த புகைப்படக் கலைஞரை இனம் கண்டு, அவரது படைப்புக்களை வெளிக்காட்டி, அவரது படைப்புக்களுக்கு கௌரவத்தை கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறது கற்பிட்டியின் குரல். இது புத்தள மாட்டத்தில் திறன்மிக்க இளைஞர்களைஅடயாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு பணியாகும்.





























































0 Comments