ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கிண்ணியாவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
மூதூர், சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களின் காணிகளை மீள வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால, இடைவழியில் கிண்ணியாவுக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.
கிண்ணியாவின் புகாரியடி சந்தியில் முன்னறிவிப்பின்றி வந்திறங்கிய ஜனாதிபதி, அங்கிருந்து சற்று தூரம் வரை பொதுமக்களுடன் சேர்ந்து நடந்து சென்றார்.
அதன் பின்னர் ஜனாதிபதியின் வருகையை அடுத்து அப்பகுதியில் கூடிய சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் சிறு உரையொன்றை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால, கிண்ணியா பிரதேச மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
எந்தவொரு அரசியல்வாதியினதும் அழைப்புமின்றி கிண்ணியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது கிண்ணியா மக்கள் தனக்களித்த மாபெரும் வரவேற்பையும் நன்றியுடன் நினைவு கூர்ந்ததார்.

0 Comments