Subscribe Us

header ads

தேசியப் பட்டியல் பெயர் விபரங்களில் மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது!– தேர்தல் ஆணையாளர்


தேசியப் பட்டியல் பெயர் விபரங்களில் மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த ஆவணம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பட்டியலை இனி எவராலும் மாற்றி அமைக்க முடியாது.

தேசியப் பட்டியல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் கட்சிகளில் தோல்வி அடையும் வேட்பாளர்கள் மட்டுமேää நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும்.

அரசியல் அமைப்பின் 14ம் திருத்தச்சட்டத்தின் 99(அ) சரத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடாத எவரும் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments