Subscribe Us

header ads

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா,இலங்கை சகோதரர்கள் கவனமாக இருங்கள்:



ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரில் ஈடுபட்ட இந்திய இளைஞர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஒரு சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதற்கு என்றே கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத், லக்னோ ஆகிய இந்திய நகரங்களில் சில குழுக்கள்  செயல்படுகின்றன. 

இவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்கும் வேலையை செய்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 13 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் ஆறு பேர் சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடிவரும் ஐ.எஸ். தீவிரவாதக் குழுவினரின் படைக்காக போராடி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இறந்தவர்களில் இரு வாலிபர்கள் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள கல்யான் பகுதியை சேர்ந்தவர்கள். ஒருவர் ஐதராபாத் நகரைச் சேர்ந்தவர். மீதி மூன்று வாலிபர்களும் ஏற்கனவே இந்திய முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்து, பாகிஸ்தானுக்குச் சென்று ஆயுதப் பயிற்சி பெற்று, அங்கிருந்து சிரியாவுக்கு சென்று தீவிரவாத அமைப்பில் சேர்ந்து சண்டையிட்டவர்கள் என இந்திய உளவுத்துறையைச் சேர்ந்த தலைமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மீதமுள்ள ஏழு பேரில் ஒருவர் மட்டும் ஆயுதங்களுடன் போரில் சண்டையிட்டு வருவதாகவும், மீதி ஆறு வாலிபர்கள் போரிடுபவர்களுக்கு உதவி செய்யும் சமையல்காரர், எடுபிடி பணியாளர் மற்றும் டிரைவராக வேலை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம் இந்தியாவில் உள்ள வலைதளங்கள் மற்றும் social media அனைத்தும் தீவிரமாக கண்காணிக்க படுகிறது.

Post a Comment

0 Comments