Subscribe Us

header ads

டயட்டில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களால் குழந்தைகளுக்கு ஆபத்து

கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருதல் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் குறிப்பிட்டு வருவது தெரிந்ததே.

இந்நிலையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் டயட்டைப் பேணுவதால் குழந்தைகளுக்கு இருதய நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வில் 19,000 கர்ப்பிணித் தாய்மார்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கர்ப்ப காலங்களில் போலிக் அசிட்டினை உள்ளெடுப்பதனால் Spina Bifida எனப்படும் குழந்தைகளின் முள்ளந்தண்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தினைதவிர்க்க முடிவதுடன், விட்டமின் D இனை உள்ளெடுப்பதனால் ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகள் குழந்தைகளுக்கு கிடைக்கப்பெறும் எனவும் மருத்துவ நிபுணர்கள்குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments