Subscribe Us

header ads

உச்சபட்ச கோபமாக நடந்துகொள்வது உயரம் குறைவான ஆண்களே! காரணம் தெரியுமா?



இளம் வயதில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இருப்பதுதான் ஆண்மை, என்று ஆண் பிள்ளைகளுக்கு சமூகத்தால் திரும்பத் திரும்ப உணர்த்தப்படுகின்றது.

பல சமயங்களில் இதுபோன்ற கண்ணோட்டத்தாலேயே குள்ளமாக இருக்கும் ஆண்கள் அவமானத்துக்கு உள்ளாகின்றனர். அவமானத்துடனே வாழ்க்கையை கையாளும் இந்த ஆண்கள், ஒருகட்டத்தில் தனது ஆண்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற, சீண்டல்களாலும், தூண்டல்களாலும் வெறுப்பின் உச்சிக்குப்போகும் அவர்கள், அடுத்தவர்களை ஆயுதங்களால் தாக்க மூன்று மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் உள்ள தேசிய நோய்த்தடுப்பு ஆணையம் மூலம் சுமார் 600 ஆண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பொதுவாக இருக்கும் ஆண்களை விட உயரம் குறைவான, கட்டுடல் இல்லாதவர்கள் வெறும் கைகளால் அடித்தோ, ஆயுதங்களால் தாக்கியோ.., சண்டைபோடும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக, குள்ளமானவர்களில் இளம்பருவத்தினரே இதுபோன்ற செயல்களில் அதிகமாக ஈடுபடுவதாகவும் இந்த ஆய்வு மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. 

இதுபோல அடுத்த தலைமுறையும் மாறாமல் இருக்க, நமது கண்ணோட்டம் மாறினாலே போதுமானது. பிஞ்சு மனதில் நாம் பதிய வைக்கும் இதுபோன்ற விஷயங்கள்தான் நஞ்சாய் மாறுகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுவது எதிர்கால தலைமுறையினருக்கு நல்லது.

Post a Comment

0 Comments