றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீனை சித்திரவதை செய்து போது தாஜூடீன் வலியால் சத்தமிடுவதை தொலைபேசி மூலம் அவரது காதலி கேட்டுமாறு செய்து, அவரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7 கில்பட் டெரசில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தாஜூடீனின் கொலை பற்றி கூறும் போது ராஜபக்ச அரசாங்கம், அவரது கோஷ்டியினரும் பொய்களை கூறியுள்ளனர்.
இலங்கையில் எந்த வாகனமும் முற்றாக எரிந்து அதில் இருந்தவர் எவரும் உயிரிழந்ததில்லை.
இது கொலை என்பதை மகிந்த ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அப்படியானால், ஏன் விசாரணைகள் எதனையும் நடத்தாது, அதனை மூடிமறைத்தனர் என்பது பிரச்சினைக்குரியது.
தேர்தலுக்குப் பின்னர், இந்த கொலை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அனைவருக்கும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.


0 Comments