பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளினால் அச்சுறுத்தல் காணப்படுவதாக பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த அச்சுறுத்தல்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைகளின் ஓர் கட்டமாக இன்று மாலை பொதுபல சேனாவின் தலைவர் டிலாந்த விதானகே பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கிருலப்பணை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு டிலாந்த விதானேகேயிடம் பொலிஸார் கோரியிருந்தனர்.
இதன் அடிப்படையில் இன்று மாலை டிலாந்த வாக்கு மூலமொன்றை அளிக்க உள்ளார்.


0 Comments